விநாயகப் பெருமான் தடைகளை நீக்கி மகிழ்ச்சியைத் தருகிறார். விநாயகப் பெருமானின் பாடல்களைக் கேட்பது மற்றும் பாராயணம் செய்வது வாழ்க்கையின் ஒவ்வொரு கடினமான கட்டத்திலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
ஜெய ஜெய கணபதி Jaya Jaya Ganapathy Om Tamil Lyrics
ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஸ்ரீ
ஜெய ஜெய கணபதி ஓம்
ஜெய ஜெய ஜெய என பாடிப் பணிந்தோம்
ஜெகமெங்கும் அமைதியை தா ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்
மதகரி மாமுக கணபதி ராஜா
சித்தி விநாயகனே – வினை
தீர்த்திடும் வேழவனே
சத்தியம் தர்மம் நாளும் துலங்க
கீர்த்தியெல்லாம் அடைய – அப்பப்பா
கீர்த்தியெல்லாம் அடைய
பக்தி பெருகிட பாவம் விலகிட
அருள்வாய் கணபதி ஓம் - ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்
மதகரி மாமுக கணபதி ராஜா
சித்தி விநாயகனே – வினை
தீர்த்திடும் வேழவனே
அப்பமும் அவல்பொரி வேண்டிக் கொடுக்க
ஏற்றிடவே வருக – அப்பப்பா
ஏற்றிடவே வருக
அன்பை வழங்கிட ஆசை அறுபட
அருள்வாய் கணபதி ஓம் - ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்
மதகரி மாமுக கணபதி ராஜா
சித்தி விநாயகனே – வினை
தீர்த்திடும் வேழவனே
செல்வமும் கல்வியூம் சேர்ந்து விளங்க
வீரம் எல்லாம் தருக - அப்பப்பா
வீரம் எல்லாம் தருக
நித்தம் மகிழ்திட நீதி நிலைத்திட
அருள்வாய் கணபதி ஓம் - ஓம் ஓம்
ஜெய கணபதி ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்
மதகரி மாமுக கணபதி ராஜா
சித்தி விநாயகனே – வினை
தீர்த்திடும் வேழவனே
பந்தமும் பாசமும் சேரக்கிடைக்க
ஆசியெல்லாம் தருக - அப்பப்பா
ஆசியெல்லாம் தருக
மங்களம் வளங்கிட மாரி பொழிந்திட
அருள்வாய் கணபதி ஓம் - ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்
மதகரி மாமுக கணபதி ராஜா
சித்தி விநாயகனே – வினை
தீர்த்திடும் வேழவனே
Comments
Post a Comment